NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Thursday 7 April 2016

கோட்ட / கிளைச் சங்கச் செயலர்களின் கவனத்திற்கு!! மத்தியச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதிப் பணம் நிலுவையிலிருப்பின் உடனடியாக பணவிடை மூலமாகவோ (Money Order) அல்லது வரைவோலை மூலமாகவோ (Demand Draft) செலுத்திவிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

செலுத்தவேண்டிய முகவரி

Shri. Bhagavan,
Financial Secretary.
NAPE Group ‘C’, (FNPO P3)
Postal Assistant,

Dellhi GPO. 110 006.


வங்கியில் செலுத்த விரும்பினால்
Axis Bank

Account Number 007010100288422

மாநிலச் சங்கம் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மாநிலச் சங்கதிற்கு உண்டான பகுதிப் பணத்தை யாரும் செல்லுபடி ஆகாத ADHOC COMMITTEE க்கு அனுப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மாநிலச் செயலர்.



செல்லாத ADHOC COMMITTEE’S GROUP MEETING @ TIRUCHIRAPPALLI  ON 10.04.2016

அன்பார்ந்த கோட்ட/கிளைச் செயலர்களே!!!
நமது மாநிலச் செயற்குழு 13.03.2016 அன்று கடலூரில் நடைபெற்றது.  3 மாதங்களே செல்லுபடியாகும் ADHOC COMMITTEE,  2 வருடங்களுக்கு மேல் நீடிப்பதால் நமது மாநிலச் சங்கத்தின் ஜனநாயக ரீதியான செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது.  ஆகவே நாம் உரிய முயற்சிகளை மேற்கொண்டு மாநிலச் சங்கம் மீண்டும் முழு வீச்சுடன் செயல்பட வழிகளை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.  இதற்கிடையில் மாநிலச் சங்கதில் நிலவும் முட்டுக் கட்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் கோட்ட/கிளைச் செயலர்களின் கூட்டம் 10.04.2016 அன்று நடைபெற இருப்பதாக ADHOC COMMITTEE தன்னிச்சையாக அறிவித்துள்ளது.  இது மாநிலச் சங்கம் மேற்கொண்டுவரும் சமரச முயற்சிகளை பலவீனப் படுத்துவதாக இருக்கிறது.  இவர்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மீறி மாநிலச் சங்க நிர்வாகிகள் தேர்தல் 10.07.2014 அன்று நடைபெறும் என்று அறிவித்து அனைத்து  கோட்ட/கிளைச் செயலர்களையும் கோவில்பட்டிக்கு வரவழைத்து நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்தார்கள். கோவில்பட்டி கூட்டம் போலவே 10.04.2016 அன்று திருச்சியில் ஒரு GROUP MEETING  மீண்டும் அனைவரின் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இந்த GROUP MEETING  -ல் கோட்ட/கிளைச் செயலர்கள் பங்கேற்க வேண்டாம் என மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது. 

மாநிலச் செயலர்



நமது சங்கத்தின் மாநிலச் செயற்குழு 13.03.2016 அன்று கடலூரில் நடைபெற்றது.  அதில் மாநில உதவிச் செயலராக கோவை கோட்டச் செயலர் திருமதி. K. ஜெயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
1. 7வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை எதிர்த்து FNPO உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தமிழ் மாநிலச் சங்கம் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது.

2. CBS குறைபாடுகளை களைய சம்மேளனப் பொதுச் செயலர் திரு D. தியாகராஜன் அவர்கள் அஞ்சல் துறை நிர்வாகத்திடம் எடுத்துவரும் முயற்சிகளை மாநிலச் செயற்குழு பாராட்டியது.

இன்னும் சில அமைப்பு ரீதியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அவை விரைவில் வெளிவரும்.



மாநிலச் செயலர்.
Vague News about implementation of 7th CPC recommendation is Posted in Internet