செல்லாத ADHOC COMMITTEE’S GROUP
MEETING @ TIRUCHIRAPPALLI ON 10.04.2016
அன்பார்ந்த கோட்ட/கிளைச்
செயலர்களே!!!
நமது மாநிலச் செயற்குழு
13.03.2016 அன்று கடலூரில் நடைபெற்றது. 3 மாதங்களே செல்லுபடியாகும் ADHOC COMMITTEE, 2 வருடங்களுக்கு மேல் நீடிப்பதால் நமது மாநிலச் சங்கத்தின் ஜனநாயக ரீதியான
செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது. ஆகவே
நாம் உரிய முயற்சிகளை மேற்கொண்டு மாநிலச் சங்கம் மீண்டும் முழு வீச்சுடன் செயல்பட வழிகளை
ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில்
மாநிலச் சங்கதில் நிலவும் முட்டுக் கட்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு திருச்சி
தலைமை அஞ்சலகத்தில் கோட்ட/கிளைச் செயலர்களின் கூட்டம் 10.04.2016 அன்று நடைபெற இருப்பதாக ADHOC COMMITTEE
தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
இது மாநிலச் சங்கம் மேற்கொண்டுவரும் சமரச முயற்சிகளை பலவீனப் படுத்துவதாக இருக்கிறது. இவர்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை
மீறி மாநிலச் சங்க நிர்வாகிகள் தேர்தல் 10.07.2014
அன்று நடைபெறும் என்று அறிவித்து அனைத்து கோட்ட/கிளைச்
செயலர்களையும் கோவில்பட்டிக்கு வரவழைத்து நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்தார்கள்.
கோவில்பட்டி கூட்டம் போலவே 10.04.2016
அன்று திருச்சியில் ஒரு GROUP MEETING மீண்டும் அனைவரின் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த GROUP
MEETING -ல் கோட்ட/கிளைச் செயலர்கள் பங்கேற்க
வேண்டாம் என மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மாநிலச்
செயலர்
No comments:
Post a Comment