15.08.2016
முப்பெரும் விழா
அரக்கோணம் FNPO கோட்டச் சங்க நான்காம்
பிரிவும், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கமும் இணைந்து மாநாட்டு
விழாவும் தலைவர் திரு. K. இராமமூர்த்தி அவர்களின்
நினைவுக் கல்வெட்டு திறப்பு விழாவும் 15.08.2016
அன்று (திங்கட்கிழமை) திரு. P.
குமார் அவர்கள் தலைமையில் அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்
நடைபெற்றது.. FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் சங்கக் கொடி ஏற்றி தலைவர்
திரு. K. இராமமூர்த்தி அவர்களின் நினைவுக் கல்வெட்டையும் திறந்து வைத்தார். NUGDS மாநிலச் செயலர் திரு. P. கோதண்டராமன் அவர்கள் NUGDS நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்துச் சிறப்புறை ஆற்றினார். திரு.
P. சுகுமாரன் மாநிலச்
செயலர் FNPO P4, அவர்கள் அஞ்சல் நான்கின்
நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்துச் சிறப்புறை ஆற்றினார். FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள்,
வேலை நிறுத்தப் போராட்டம், அஞ்சல் துறையின் தற்போதைய நிலை, ஊழியர்களின் பிரச்சனைகள்,
தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் மேலும் பல்வேறு விஷயங்களை விரிவான உரை நிகழ்த்தினார். மாநிலச் செயலர்
திரு.
B. கவுஸ்பாஷா,
அம்பத்தூர் கிளைச் செயலர் R இராசகோபாலன் காஞ்சிபுரம் கோட்டச்
செயலர். திரு. R . சக்திவேல், வேலூர் கோட்டச் செயலர். திரு. D.சிவலிங்கம்,
பாண்டிச்சேரி கோட்டச் செயலர். திரு. V.J. நம்பிராஜன் மத்திய
சென்னை கோட்ட உதவிச் செயலர். திரு.
S. கபிலன் மேலும் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.. அரக்கோணம் கோட்டப் பொருளர் திருமதி v. துளசிபாய்
அவர்கள் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்