25/06/2017
அம்பத்தூர் கிளைச் சங்க அஞ்சல் மூன்றின் 20 வது மாநாடு 25.06.2017
அம்பத்தூர் கிளைச் சங்க அஞ்சல் மூன்றின் 20 வது மாநாடு 25.06.2017
அம்பத்தூர் கிளைச் சங்க அஞ்சல்
மூன்றின் 20 வது மாநாடு 25.06.2017 அன்று அம்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. FNPO P4ன் மாநிலச் செயலரும் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான திரு. P. சுகுமாறன் அவர்கள் அஞ்சல் மூன்றின் சங்கக் கொடி ஏற்றினார்.
FNPO சமேளன மாபொதுச் செயலர்
திரு.
D. தியாகராஜன் அவர்கள் அஞ்சல் நான்கின் புதிய கல்வெட்டினைத் திறந்து
வைத்து சங்கக் கொடியினையும்
ஏற்றினார்.
அம்பத்தூர்
கிளைச் சங்கத் தலைவர் திரு. C. அர்ஜுனன் அவர்கள் தலைமை தாங்கினார். அம்பத்தூர் கிளைச் சங்கச் செயலர் திரு. R. இராசகோபாலன் ஈராண்டறிக்கை வாசித்தார். அம்பத்தூர்
கிளைச் சங்கப் பொருளர் திரு. R. ஜெகன்நாதன் அவர்கள் ஈராண்டின் வரவு செலவுக் கணக்கை
சமர்ப்பித்தார். FNPO P4ன் மாநிலச் செயலரும் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான திரு. P. சுகுமாறன் அவர்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்து
சிறப்புறை ஆற்றினார். அம்பத்தூர் தலைமை அஞ்சலக
அதிகாரி திரு M. இராசேந்திரன் அவர்கள், திரு. B. கவுஸ்பாஷா அவர்கள்
அண்ணாசாலை, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தாம்பரம் கோட்டச் செயலர். திரு. G. சுப்பிரமணி அவர்கள், பொருளர்
திரு G.
தனபால்
அவர்கள், தாம்பரம்
கோட்டச் செயலர் (FNPO P4) திரு. K. இராமசாமி
அவர்கள், அம்பத்தூர் H.O. APM (A/CS) திருமதி. J. கோப்பெருந்தேவி அவர்கள், அம்பத்தூர்
கிளையின் உதவிச் செயலர் திரு. K. நாகராஜ் அவர்கள்.
அம்பத்தூர் கிளைச் செயலர் (FNPO P4) திரு. G. பரஞ்சோதி அவர்கள், ஆவடி
கிளைச் செயலர் திரு. M. மதியழகன் அவர்கள்,
ஆவடி கிளைச் செயலர் (FNPO P4) திரு. R. நாராயணன்
அவர்கள், சென்னை GPO கோட்டச் செயலர். திரு. A. மணிவேலன் அவர்கள், தென்
சென்னைக் கோட்டச் செயலர் திரு. K. சுல்தான் மொஹைதீன்
அவர்கள், காஞ்சிபுரம் கோட்டச்
செயலர். திரு. R . சக்திவேல் அவர்கள், காஞ்சிபுரம் கோட்டச் செயலர்.
(NUGDS) திரு. R. சரவணவேல் அவர்கள், அரக்கோணம் கோட்டச் செயலர். திரு. A.
மணி
அவர்கள், பொருளர் திரு. குமார் அவர்கள், செங்கல்பட்டு
கோட்டச் செயலர். திரு. A.X. சங்கராயன் அவர்கள், பொருளர் திரு
தியாகராஜன் அவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் செயலர் திரு N. தயானந்தன் (காஞ்சிபுரம்) அவர்கள், அம்பத்தூர் கிளையின்
முன்னாள் செயலர்கள் திரு. G. சீனுவாசன் அவர்கள், திரு V. ஏகாம்பரம் அவர்கள், திரு
G. இராசேந்திரன் அவர்கள் திரு K. கோவிந்தசாமி
அவர்கள் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்திப் பேசினர். மேலும் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.
FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு.
D. தியாகராஜன் அவர்கள் நீண்ட சொற்பொழிவாற்றினார். அவரது உரையில்
கேடர் சீரமைப்பு, 7வது ஊதியக் குழுவின் சிறப்பம்சங்கள் முக்கியமாக Allowances,
Pension முதலியன
இடம் பெற்றது மாநாட்டிற்கு முத்தாய்ப்பாக அமைந்தது. மேலும் ஊழியர்களின் சந்தேகங்களைப்
பூர்த்தி செய்வதாகவும் அமைந்தது. அதுமட்டுமன்றி
அவர் தனித் தனியாகவும் உறுப்பினர்களின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். இறுதியாக
அம்பத்தூர் கிளைச் சங்கச் செயலர் திரு. R.
இராசகோபாலன் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவுற்றது.
நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட
நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் திரு. C. அர்ஜுனன்
செயலர் திரு. R.
இராசகோபாலன்
பொருளர் திரு. R. ஜெகன்நாதன்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்