NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Wednesday, 26 August 2015

அரக்கோணம் கோட்ட FNPO மாநாடு 23.08.2015

அரக்கோணம் கோட்ட FNPO மாநாடு துவக்க விழாவும் தலைவர் திரு. K. இராமமூர்த்தி அவர்களின் 103வது பிறந்த தின விழாவும் 23.08.2015 அன்று  திரு. P. குமார் அவர்கள் தலைமையில் அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. FNPO சமேளன மாபொதுச் செயலர்  திரு.    D. தியாகராஜன் அவர்கள் சங்கக் கொடி ஏற்றினார். முன்னாள் மாநிலச் செயலர் திரு. G.P. முத்துகிருஷ்ணன் அவர்கள் சிறப்புறை ஆற்றினார். அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் திரு. R சரவணன் அவர்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்தார். மாநிலச் செயலர்  திரு. B. கவுஸ்பாஷா, முன்னாள் அரக்கோணம் கோட்டச் செயலர். திரு. R . பாபு, சென்னை GPO கோட்டச் செயலர். திரு. A. மணிவேலன்,  தென் சென்னைக் கோட்டச் செயலர் திரு. K.  சுல்தான் மொஹைதீன் சென்னை வடகோட்டத் தலைவர் திரு.C. சாமிநாதன், சென்னை வடகோட்டச் செயலர் திரு. G.B.  பிரதீப்குமார், சென்னை வடகோட்டப் பொருளர் திரு. G. மோகன் அம்பத்தூர் கிளைச் செயலர் R இராசகோபாலன் காஞ்சிபுரம் கோட்டச் செயலர். திரு. R . சக்திவேல், வேலூர் கோட்டச் செயலர். திரு. D. சிவலிங்கம், திருவண்ணமலை கோட்டத் தலைவர் திரு. T. அண்ணமலை மத்திய சென்னை கோட்ட உதவிச் செயலர். திரு. S. கபிலன் மேலும் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.. அரக்கோணம் கோட்டத்தில்  FNPO துவங்க பெரிதும் உறுதுணையாக இருந்த திருமதி. A. சஹாராபானு அவர்கள் அனைவராலும் பாராட்டப் பெற்றார். நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.         
தலைவர்       திரு. A. ஸ்ரீநிவாசசம்பத் 
செயலர்        திரு.  A. மணி
பொருளர்       திருமதி  v. துளசிபாய்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்