அன்பு கெழுமிய மாநிலச் சங்க நிர்வாகிகளே, கோட்ட,கிளை
சங்க பொறுப்பாளர்களே, உறுப்பினர்களே வணக்கம்,
02 - 03 - 2015 (திங்கட் கிழமை) JCA யின் அரை கூவலுக்கினங்க
தர்ணா போராட்டம் அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திரு. K. குணசேகர் தமிழ் மாநிலச் செயலர்
FNPO – P4, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
NFPE - யின் சார்பில் திரு. J. இராமமூர்த்தி மாநிலச் செயலர் NFPE – P3 அவர்களும் NFPE உறுப்பினர்களும்
தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். FNPO P3 தொழிற் சங்கத்தின் செயலர்களான திரு. முனுசாமி அண்ணாசாலை H.O, திரு. A. மணிவேலன் சென்னை G.P.O, திரு. K. சுல்தான் முகைதீன் - தென் சென்னை, திரு.இராமதாஸ் மத்திய சென்னை, திரு.கபிலன் உதவிச் செயலர், மத்திய சென்னை, திருமதி. B. ஆரோக்கிய செல்வி - வட சென்னை, திரு. தங்கராஜ் - முன்னாள் செயலர் வட சென்னை திரு. R. இராஜகோபாலன் அம்பத்தூர் கிளை
ஆகியோரும்
FNPO – R3 மாநிலச் செயலர் திரு. குமார் அவர்களும் தர்ணா போராட்டதில் பங்கேற்றனர்.
தர்ணா போராட்டதின் முக்கிய அம்சமாக முன்னாள் மாநிலச் செயலர் திரு. G.P. முத்துகிருஷ்ணன் அவர்கள் வீர உரையாற்றினார், அவரது வீர உரையில் 28-02-0215 அன்று தாக்கல் செய்த மத்திய Budget பற்றியும், நமது 39 அம்ச கோரிக்கைகள் பற்றியும், போராட்டதின் முக்கியத்துவத்தை பற்றியும் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் தற்போதைய நிலைமை பற்றியும், அரசு
ஊழியர்களின் நிலைமைகள் குறித்தும் வெகு சிறப்பான முறையில் உரையாற்றினார். அவரது உரை
தர்ணா போராட்டத்தில் பங்கேற்க வந்த அணைவரையும் ஈர்த்தது, இறுதியாக திரு. B. கவுஸ் பாஷா
மாநிலச் செயலர் FNPO – P3 அவர்கள் உரையில் 39 அம்ச கோரிக்கைகள் பற்றியும் அன்றாட வாழ்வில்
ஊழியர்களின் இன்னல்கள், ஊழியர்கள் எதிர்கோள்ளும் கடுமயான சவால்கள் அஞ்சலகத்தில் நாளுக்குநாள்
துவங்கும் புதிய திட்டங்கள் ஆள் பற்றாகுறை ஆகியவற்றை பற்றி வீரம் செரிந்த
உரையாற்றி நன்றி கூற தர்ணா போராட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.
போராட்ட
வாழ்த்துக்களுடன்
JCA ZINDHABADH
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment