20.08.2016
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே!!
2014 பிப்ரவரி மாதத்தில்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நமது மாநிலச் சங்கத்தின் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு எதிராக குறுக்கு வழியில் மாநிலச் சங்கத்தை கைப்பற்ற இடைக்காலக் குழு
என்ற போர்வையில் நடந்த சதியை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த
18.08.2016 அன்று தீர்ப்பு ஆகியுள்ளது. தீர்ப்பின்
நகல் கிடைத்தவுடன் விவரம் வெளியிடப்படும்.
இதற்கிடையில் மாநில மாநாடு என்ற பெயரில் 10.07.2014 அன்று கோவில்பட்டியில் ஒரு
நாடகத்தினை அரங்கேற்றியவர்கள் அவசர அவசரமாக மீண்டும் ஒரு நாடகத்தினை 11.09.2016 அன்று சேலத்தில் அரங்கேற்றத் துடிக்கிறார்கள். மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/கிளைச் சங்கச்
செயலர்கள் இந்த நாடகத்தினை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். உயர்நீதி மன்றத்தின்
தீர்ப்பு கிடைத்தவுடன் மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
B. கவுஸ்பாஷா
மாநிலச் செயலர்
No comments:
Post a Comment