NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Wednesday, 3 February 2016

வைக்கோல் வாழ்க்கை
 ஆளுக்கொரு வேலை
அவரவருக்கு பல தேவை
ஊசி முனையளவும்
ஊர் உலகை நினையாமல்
காசொன்றே வாழ்வென்று
கரைகிறது ஜனக்கூட்டம்.
வாசலில் கோலமிட
வாய்ப்பில்லா பெருநகரில்
பூசணிப்பூ வாசத்தை
நுகர்ந்ததில்லை மார்கழிகள்.
யோசனைகள் மொத்தமுமே
இ.எம்.ஐ என்றாக
செல்போனில் இழவுகேட்டு
சொல்லுகிறோம் ஆறுதலை.
வாழ வழி தெரியவில்லை
வருசமெல்லாம் நடைப்பயிற்சி
பணமிருந்தால் போதுமெனும்
பரிதவிப்பில் இளைத்துவிட்டோம்.
சக்கையான வைக்கோலை
உண்ட பசு பால் கறக்க
சத்தியத்தை தொலைத்துவிட்ட
சம்பாத்தியம் என்னத்துக்கு ?

                       … யுக பாரதி
                 ஆனந்த விகடன் 20.01.2016


No comments:

Post a Comment