சென்னை
GPO வின் 30 வது கோட்ட மாநாடு 06.06,2015 அன்று சிறப்பாக நடைபெற்றது. நமது சம்மேளனப் பொதுச் செயலர் திரு
D. தியாகராஜன் அவர்கள் வருகை புரிந்து சிறப்புரை ஆற்றினார். நமது முன்னாள் மாநிலச் செயலர்கள் திரு. G. கண்ணன் அவர்கள், G.P. முத்துகிருஷ்ணன் அவர்கள் முன்னாள் மாநிலத் தலைவர் திரு புருஷோத்தமன் அவர்கள் முன்னாள் மாநிலப் பொருளர் திரு H.M. அப்துல்காதர் அவர்கள் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தினர். பல்வேறு கோட்ட/கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் வருகை புரிந்து மாநாட்டினை வாழ்த்தினர். திருமதி. R. மல்லிகா அவர்கள் தலைவராகவும் திரு. A மணிவேலன் அவர்கள் செயலராகவும் திரு. சுப்பிரமணி அவர்கள் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக கோட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. R. மல்லிகா அவர்கள் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவுற்றது தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்.
கவுஸ்பஷா
No comments:
Post a Comment