சென்னை
வடகோட்ட NAPE (FNPO) அஞ்சல் மூன்றின்
கோட்ட
மாநாடு இன்று (17.05.2015) காலை
10 மணியளவில் பூங்கா நகர் தலைமை
அஞ்சலகதில் நடைபெற்றது. கோட்ட
மாநாட்டில் நமது சம்மேளனப் பொதுச்செயலர்
திரு. D. தியாகராஜன்
அவர்கள் தமது உரையில் வேலை நிறுத்தம்
விலக்கிக் கொள்ளப்பட்ட காரணங்களையும் எதிர்காலங்களில் நாம் சந்திக்கவுள்ள சவால்களைப்
பற்றியும் விளக்கியதோடு தொடர்ந்து ஒற்றுமையோடு செயல்படவேண்டிய அவசியதையும் வலியுறுத்தினார். நமது முன்னள் மாநிலச்
செயலர் திரு G.P. முத்துகிருஷ்ணன்
அவர்கள் தமது உரையில் இன்றுள்ள
அரசாங்கதின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் குறித்தும்
எதிர்வரும் மத்திய அரசு ஊழியர்களின்
போராட்டங்களின் அவசியங்கள் விளக்கிப் பேசினார். அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர்
திரு K. குணசேகரன் அவர்கள் இன்றுள்ள நிர்வாகதின்
அவலங்களை விளக்கியதோடு ஊழியர்களின் ஒற்றுமை காக்கப்படவேண்டும்
என்று வலியுறுத்தினார். மேலும் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. D. விநாயகம், மாநிலச் செயலர் திரு. B. கவுஸ்பாஷா, மாநிலத் தலைவர் திரு. R. இராமசாமி, மாநில உதவிச் செயலர்கள் திரு. A. மணிவேலன், திரு. K. சுல்தான் முகைதீன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப்
பேசினர். மேலும் பல முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: திரு. C. சாமிநாதன்
செயல்
தலைவர். திருமதி.
A.B. ஆரோக்கியசெல்வி
துணைத்
தலைவர்கள் திரு G. நிஸார்
அகமது ,
திரு. A. ப்ரதாப்ராஜ்.
செயலர்
திரு. G.B. ப்ரதீப்குமார்.
உதவிச்
செயலர்கள் திரு.
D. ஆனந்த்.
திரு. S. கோவிந்தராஜன்.
திருமதி S. ரமணி.
திரு. O. ஷ்யாம்.
திரு. S.R. குபேந்திரன்.
பொருளர். திரு. G. மோகன்.
உதவிப்
பொருளர். திரு. V. அரசு.
அமைப்புச்
செயலர்கள் திரு
P. சார்லஸ்.
திரு. R. குமார்.
திரு. B. குணசேகர்.
தணிக்கையாளர். திரு. S. சுரேஷ்பாபு.
தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கதின் வாழ்த்துக்கள்
B. கவுஸ்பாஷா,
No comments:
Post a Comment