தமிழ் மாநில தேசிய அஞ்சல்
ஊழியர் சங்க (FNPO – P3) நிர்வாகிகளாக
2012 முதல்
2014 வரை பணியாற்றி ஓய்வு
பெற்ற
தோழர்களுக்கு பாராட்டு விழா (05 - 04 - 15) அன்று
காலை 10 மணி அளவில்
அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக
நடைபெற்றது. FNPO சம்மேளன மா
பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன்
அவர்கள் தலைமை ஏற்று விழாவினை
சிறப்பாக நடத்தி வைத்தார்.
திரு.R.
ராமசாமி(கடலூர்) அவர்களும், திரு.
B. கவுஸ்
பாஷா (அண்ணா சாலை) அவர்களும் முன்னிலை
வகித்தனர். வாழ்த்துரை
வழங்க மாநிலச் செயலர்கள் முறையே
திரு. K. குணசேகர் (FNPO – P4), திரு.
P. குமார்(FNPO – R3), திரு. S. ஸ்ரீதர் (R4), திரு. G. அந்தோனி Civil - Elec, வருகை புரிந்து சிறப்பித்தனர்.
மேலும்
கோட்ட
/ கிளைச் செயலர்கள் முறையே திருமதி.
A . B. அரோக்கிய
செல்வி (வட சென்னை), திரு.
U. ராமசாமி
(உதகை), திரு. G. விஜயகுமார்
(திருப்பத்தூர்), திரு. A. மணிவேலன்
Ch
- GPO, திரு. R. ஜெயகுமார் (மயிலாடுதுறை), திரு.
K. முனுசாமி
(அன்னாசாலை), திரு.ராமதாஸ் மத்திய
சென்னை, திரு. R. ராசகோபாலன்
அம்பத்தூர் கிளை, திரு. M. மதியழகன் ஆவடி கிளை, திரு.
G. சுப்ரமணியம்
தாம்பரம் கோட்டம், திரு. A. X. சிங்கராயன் செங்கல்பட்டு, திரு.D. பிரபாகரன்
RLO, திரு. R. சக்திவேல்
காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, திருப்பூர், ஈரோடு, புதுகோட்டை,
திருவண்ணாமலை, கோவை, மதுரை, கடலூர் கோட்ட நிர்வாகிகள் ஆகியோரும் பல்வேறு கோட்ட/கிளை
சங்கங்களின் P3, P4, GDS நிர்வாகிகளும்,
உறுப்பினர்களும் கலந்துக்கொண்டு இந்த பாராட்டு விழாவினை வெகுவாக சிறப்பித்தனர்.
விழாவில்
உறையாற்றிய அனைவரும் முன்னாள் மாநிலச் செயலர் திரு.
G.P. முத்து கிருஷ்ணன் அவர்களையும்,
அவருடன் இணைந்து பணியாற்றிய ஓய்வு
பெற்ற மாநிலச் சங்க நிர்வாகிகள் 15 பேரையும் வெகுவாக
வாழ்த்திப் பேசினர், சம்மேளன மா பொதுச்
செயலர் திரு.D. தியாகராஜன்
அவர்கள் உரையாற்றும் போது முன்னாள் மாநிலச் செயலர் திரு.
G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்
பணியாற்றிய 10 ஆண்டுகள் பொற்காலமாகும், தமிழ் மாநிலத்தில் அவருடைய
காலத்தில்தான் பெருவாரியான உறுப்பினர்கள்
சேர்ந்தது மட்டுமல்லாமல் நமது சங்கத்துக்கும் தனி கௌரவம் கிடைத்தது, ஏனெனில் தொழிற்சங்கப்
பணியுடன் செமினார், மகளிர் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் நடத்தியதால் உறுப்பினர்கள்
மத்தியில் மட்டுமல்லாது மாற்றுச் சங்கத்தினரும் நிர்வாகத்தினரும் வியக்கும் வண்ணம்
பணியாற்றினார் என்று பாராட்டிப் பேசினார், அவருடைய காலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளையும்
சிறப்பாக வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து விடுமுறை மற்றும் ஈஸ்டர் பண்டிகையின் காரணமாக இன்னும் சில கோட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து விடுமுறை மற்றும் ஈஸ்டர் பண்டிகையின் காரணமாக இன்னும் சில கோட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள முடியவில்லை.
நிகழ்ச்சியின்
நிறைவாக தென்
- சென்னை கோட்டச் செயலர் திரு.
K. சுல்தான்
மொய்தீன் அவர்கள் நன்றி
நவில விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment