NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Wednesday, 25 February 2015


தாம்பரம் கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் NAPE GROUP -‘C’ யின் ஈராண்டு விழா  22 - 02 - 2015 

(ஞாயிறுக் கிழமை) அன்று குரோம்பேட்டை துணை 
அஞ்சலகத்தில் கோட்டத் தலைவர் திரு. M. ராஜசேகரன்  அவர்கள் தலைமையில் நடைபெற்து முன்னாள்  மாநிலச்  செயலர் திரு. G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்  சங்கக்  கொடியினை ஏற்றி மாநாட்டைத்  துவக்கி வைத்தார்.
அவரது  வாழ்த்துரையில்  ஊழியர்களின் அத்தியாவசியத்  தேவைகளிலிருந்து சமுகப்  பாதுகாப்பு வரை  தொழிற்சங்கங்கள் துணை  நிற்பதையும் இனிவரும்  காலங்களில் நாம் எதிர் கோள்ளவிருக்கும் கடும் சவால்கள்  குறித்தும் வீரம் செரிந்த உரையாற்றி  மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.
மாநாட்டில் சம்மேளனப்  பொதுச் செயலர்  திரு. D. தியாகராஜன்  அவர்கள் சிறப்புரையாற்றினார்.  அவரது உரையில் அஞ்சல் துறையின் புதிய திட்டமான “TASK FORCE”  பற்றியும் 7வது ஊதிய குழு பற்றியும் உறுப்பினர்கள் சேர்க்கை அகில இந்திய  சங்கச்  செய்திகள் ஆகியவை பற்றியும் விரிவாக உரையாற்றி வாழ்த்திப் பேசினார்.  அவரது வாழ்த்துறையில் முன்னாள் மாநிலச் செயலர் திரு.  G,P. முத்துகிருஷ்ணன் அவர்கள் தமிழ் மாநிலச் செயலராக இருந்த 10 ஆண்டு காலங்கள் பொற்காலம் என்று குறிப்பிட்டார்
அண்ணா சாலை அஞ்சலகத்தில் இருந்து வருகை புரிந்த திரு. B. கவுஷ் பாஷா அவர்கள்  வாழ்த்திப் பேசும் போது  நமது துறையில் அறிமுகமாகும் பல புதிய திட்டங்களைப் பற்றியும், ஆள் பற்றாக்குறை,  வேலைப்பளு,  நிர்வாகத்தின் நடவடிக்கைகள்,  தொழிற் சங்கங்களின்  நடவடிக்கைகள்  ஆகியவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசினார்
இந்த மாநாட்டினை சிறப்பிக்க  திரு. H.M. அப்துல் காதிர், முன்னாள் மாநிலப் பொருளர் திரு. D. விநாயகம் முன்னாள் மாநிலத் தலைவர்தஞ்சாவூர் கோட்டச் செயலர் திரு. G. கோபால், சென்னை GPO செயலர் திரு. A  மணிவேலன் அண்ணா சாலைச் செயலர், திரு. முனுசாமி சென்னை வட கோட்டத்தின் உதவிச் செயலர் திரு.ஆனந்தன்,  தென் சென்னைக் கோட்டத்தின்  செயலர்  திரு. K. சுல்தான் மொய்தீன்,  சென்னை மத்தியக் கோட்டத்தின்  செயலர்  திரு. S.  கபிலன்,  செங்கல்பட்டுக் கோட்டத்தின் செயலர் திரு. சிங்கராயன் பொருளர் திரு. தியாகராஜன் அம்பத்தூர் கிளையின் முன்னாள் செயலர் திரு. G. இராசேந்திரன், அம்பத்தூர் கிளையின் செயலர் திரு.  R. இராசகோபாலன் ஆகியோரும், தாம்பரம் கோட்டத்தின் தொழிற்சங்க உறுப்பினர்களும் பெருமளவில் வருகை  புரிந்து வாழ்த்தினர்.   கோட்டத்தின் செயலர்  திரு. J.  மனோகரன் அவர்கள் ஈராண்டறிக்கையினை வாசிக்க,  பொருளர் திரு. G.  சுப்பிரமணியன் அவர்கள் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். பின்னார்  நடைப்பெற்ற  நிர்வாகிகள்  தேர்தலில் திரு. M. இராஜசேகரன் அவர்கள் (SPM, அஸ்தினாபுரம்) தலைவராகவும், திரு. J. மனோகரன் அவர்கள் (PA, குரோம்பேட்டை) செயலராகவும் திரு.தனபால் அவர்கள்  (PA, பல்லாவரம்) பொருளராகவும் ஏக மனதாகத் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.
கோட்டதின் உதவிச் செயலர் திரு. G. சுப்பிரம்ணியன் அவர்கள் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவேற்றப்பட்டது

                                                                                       மாநிலச் செயலர் 
Click Images

No comments:

Post a Comment