NAPE GROUP - 'C' தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 08-02- 2015 (ஞாயிறுக் கிழமை) அன்று எழும்பூரில் உள்ள நக்கீரர் அரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது . 31 - 01 - 2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மாநிலச் சங்க தலைவர் திரு.D.விநாயகம் அவர்கள் கவுரவிக்கப்பட்டார், அவருக்கு பதிலாக தலைவர் பதவிக்கு மாநிலஉதவித் தலைவரும் கடலூர் கோட்டச் செயலருமான திரு.இராமசாமி அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மாநில உதவித் தலைவர் பதவிக்கு மாநில அமைப்புச் செயலரும் திருப்பத்தூர் (N.A) கோட்டச் செயலருமான திரு.K.விஜயகுமார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.பாக்கியராஜ்(P.A) ராயபேட்டை அவர்கள் மாநில அமைப்புச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment